அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள மின் ஒயர்களை  திருடி விற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்… தட்டி தூக்கிய போலீஸ் …

அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள மின் ஒயர்களை  திருடி விற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்… தட்டி தூக்கிய போலீஸ் …

திருவள்ளூர் ;

அரசுக்கு சொந்தமான மின் ஒயர்களை திருடிய திமுக இளைஞரணி அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியில் அரசுக்கு சொந்தமான மின் ஒயர்கள் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வெங்கல் போலீசார் விசாரணை நடத்தியதில் திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் மின் ஒயர்களை திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 8 வருடமாக திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதுவரையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள மின் ஒயர்களை திருடியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

திருடப்பட்ட மின் ஒயர்களை அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் இருக்கும் பழைய இரும்பு கடைகளில் விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. அலெக்சாண்டர் மீது திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply