திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் 5-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் 5-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி பத்ர புஷ்ப யாகமும், இதற்காக மே 4-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

மே 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், விபூதி, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் நவ கலச திருமஞ்சனம் நடக்கிறது.

காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களுக்கு சாமந்தி, கன்னேறு, தாழம்பூ, சம்பங்கி, தாமரை, ரோஜா, மல்லி, கனகாம்பரம் மற்றும் வில்வம், துளசி, பன்னீர் இலைகளுடன் பத்ர புஷ்ப யாக மஹோற்சவம் நடத்தப்படுகிறது.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வரும் அர்ச்சகர்கள், கோவில் அதிகாரிகள் ஆகியோர்கள் ஏதேனும் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பத்ர புஷ்ப யாகம் செய்யப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply