பூண்டுக்குழம்பு செய்யலாம் வாங்க… செய்முறையை பார்க்கலாம்!!

பூண்டுக்குழம்பு செய்யலாம் வாங்க… செய்முறையை பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்:

உரித்த பூண்டு – 1 கப்

குழம்பு மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

புளி தண்ணீர் – ¾ கப்

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

தாளிக்க:

கடுகு – ¼ டீஸ்பூன்

வெந்தயம் – ¼ டீஸ்பூன்

மிளகு – ¼ டீஸ்பூன்

சீரகம் – ¼ டீஸ்பூன்

அரைக்க:

பூண்டு – 4 பற்கள்

மிளகு – ½ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

செய்முறை:

  • புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
  • அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  • அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகத்தை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.
  • பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
  • கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  • இப்போது ‘சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு’ தயார்.
  • இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply