பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த கார்த்தி – அடிப்பட்ட ரசிகர்!!

பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த கார்த்தி – அடிப்பட்ட ரசிகர்!!

விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

முதல் காட்சியான காலை 9 மணி காட்சியை பொன்னியின் செல்வன் -2 படக்குழு ரசிகர்களுடன் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தனர். இந்நிலையில், சென்னை, காசி திரையரங்கிற்கு இப்படம் பார்க்க நடிகர் கார்த்தி வந்திருந்தார்.

படம் முடிந்து வெளிவரும் போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வந்ததால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து ரசிகர் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக உடைந்த திரையரங்கின் கண்ணாடி சரி செய்து தரப்படும் என்று காசி திரையரங்க நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply