”வாழ்ந்து காட்டுவோம்” திட்டத்தின் கீழ் 11 பேருக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்!!

கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
தமிழ்நாட்டில் ஊரக தொழில்களை ஊக்குவிக்கவும் கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கவும் உலக வங்கி நிதியுதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சர்க்கார் சாமக்குளம் ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய தொழில்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும்
30% இணை மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.39.30 லட்சம் மதிப்பிலான 30% இணை மானியத்துடன் (ரூ.11.79 லட்சம்) கூடிய கடனுதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
இக்கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குநர் ராமச்சந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கெளசல்யா தேவி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் மணிமாறன், கோகுல்நாத், கார்த்திக், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.