கடலில் பேனா நினைவுச் சின்னம்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு …

கடலில் பேனா நினைவுச் சின்னம்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு …

சென்னை ;

சென்னை மெரினா கடலுக்கு நடுவே ₹81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதியில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடமும், நினைவிடத்தின் அருகில் வங்கக்கடலில் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடியில் பேனா நினைவுச்சின்னமும் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை  ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்தது.

மேலும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்தனர்.  

நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை தயாரித்து, தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியிருந்தது.

இந்த நிலையில்  சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது.  ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply