கோவையில் நடைபெற்று வரும் பில்லூர் 3 குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் திரு.ஆர்.அம்பலவாணன் உத்தரவு …

கோவை,
கோவையில் நடைபெற்று வரும் பில்லூர் 3 குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு தலைவர் அம்பலவாணன் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின் நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் பில்லூர்- 3 திட்டம் ரூ.779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் ஆர்.அம்பலவாணன், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் விதத்தில் போர்கால அடிப்படையில் பணிகளை செய்து முடித்திட அறிவுறுத்தினார்கள்.

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர் 3 திட்டம் 2035ம் ஆண்டு கோவை மாநகராட்சியிலுள்ள
மக்கள் தொகையை கருத்தில் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் விதத்தில் போர்கால அடிப்படையில் பணிகளை செய்து முடித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொதுமேலாளர் முருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜூ, செயற்பொறியாளர் செல்லமுத்து, உதவி செயற் பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், பாலமுருகன் (மாநகராட்சி), உதவி பொறியாளர் சாம்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.