சாதனைக்கு பொருத்தமானவர் “தல தோனி” -20 ஆவது ஓவரில் அதிக ரன் குவித்து சாதனை..!!

சாதனைக்கு பொருத்தமானவர் “தல தோனி” -20 ஆவது ஓவரில் அதிக ரன் குவித்து சாதனை..!!

இந்திய கிரிக்கெட் கண்ட மிகச்சிறந்த பினிஷர்களில் தோனி ஒருவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடும் அவர் கடைசி கட்ட ஓவர்களில் இறங்கி ஒரு காட்டு காட்டுகிறார்.

இந்நிலையில் கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் களம் இறங்கிய தல தோனி கடைசி இரண்டு பந்துகளில் சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 20 ஆவது ஓவரில் மட்டும் தோனி அடித்துள்ள ரன்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 20 ஆவது ஓவரில் 290 பந்துகளை சந்தித்துள்ள தோனி, 790 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 59 சிக்ஸர்கள் அடக்கம்.

இதன் மூலம் இறுதிக்கட்டத்தில் தான் ஒரு காட்டாறு, யாராலும் அணை போட்டுத் தடுக்க முடியாது என்பதை தோனி நிரூபித்துள்ளார்.

Leave a Reply