கத்தரி வெயில் தொடங்க இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் கன மழைக்கு வாய்ப்பு..!! – வானிலை ஆய்வு மையம் தகவல்…

கத்தரி வெயில் தொடங்க இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் கன மழைக்கு வாய்ப்பு..!! – வானிலை ஆய்வு மையம் தகவல்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து அக்னி நட்சத்திர நேரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

மே 6ஆம் தேதி முதல் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் தொடங்க இருப்பதை அடுத்து பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் ஆறாம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு என்று கூறப்படுவதை அடுத்து பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக் கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply