ரோட்டில் கொட்டிய பீர் பாட்டிகள்..!! அள்ளிச்சென்ற குடிமகன்கள்…

கிருஷ்ணகிரி அருகே மதுபானங்களை ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் இருந்த பீர் பாட்டில்களை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டி கொண்டு எடுத்துச் சென்ற காட்சி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மது பானங்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்து காரணமாக பல பீர் பாட்டில்கள் உடைந்து இருந்தாலும் உடையாத பாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து பீர் பாட்டிலை அள்ளிச் சென்ற பொது மக்களை தடுத்து நிறுத்தினார்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் அதிகாரிகளும் உடனடியாக சம்பவம் இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் உடைந்த பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தை பயன்படுத்தி ஏராளமான குடிமகன்கள் உடையாத பீர் பாட்டில்களை அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.