பிடிஆர் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்..!! -மறுத்த தமிழக ஆளுநர் ரவி…

பிடிஆர் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்..!! -மறுத்த தமிழக ஆளுநர் ரவி…

ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறல் என கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் குற்றம் சாட்டிய நிலையில் அவரது குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என ஆளுநர் ரவி ஆங்கில உலகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையின் செலவு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை நிதி அமைச்சர் பிடிஆர் கூறி உள்ளார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் என்பது ராஜா பதவி அல்ல என்றும் ஆளுநர் மாளிகையை ராஜ்பவன் என்ற பெயரை மக்கள் இல்லம் என்று அர்த்தம் தரக்கூடிய லோக் பவன் என அழைக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கூறும் ஒவ்வொரு தகவலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply