நாகரிக கோமாளி ஓபிஎஸ் என்னும் பைத்தியத்தை கண்டிக்கிறோம்.. உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டரால்  பரபரப்பு …

நாகரிக கோமாளி ஓபிஎஸ் என்னும் பைத்தியத்தை கண்டிக்கிறோம்.. உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டரால்  பரபரப்பு …

உளுந்தூர்பேட்டை;

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதலை அடுத்து தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தினார். 

இந்நிலையில், இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம்.. 

1.1/2 கோடி கழக தொண்டர்கள் 2504 கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதோடு ஓ.பன்னீர்செல்வம் வகித்த அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக அனைத்து பதவிகளையும் நீக்கியும் கழகமும் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் OPS கோமாளியே! இரட்டை இலை சின்னத்தை பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும், தகுதியும், இல்லை பைத்தியமே! 

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக ஓட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply