மதுபோதையில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்த காங்கிரஸ் பிரமுகர்… தட்டி தூக்கிய போலீஸ் …

கன்னியாகுமரி ;
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நந்தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் சேவியர்(52). காங்கிரஸ் கட்சியில் நந்தங்காடு கிளை செயலாளராக இருந்துவரும் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் ராஜன்சேவியர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அப்பகுதி பெண்களை தகாத வார்தைகளை கூறி திட்டி வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜன் சேவியர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களிடம் தனது உடைகளை அவிழ்த்து தவறாக நடக்கமுயன்றாக தெரிகிறது. இதையடுத்து ராஜன் சேவியரை பெண்கள் மற்றும் அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் பெண்களிடம் தவறாக நடக்கமுயன்ற ராஜன் சேவியரை கைது செய்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர் மீது ஏற்கனவே பெண்களிடம் தவறாக நடக்கமுயன்றது ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும் பல குற்றசாட்டுகள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ராஜன் சேவியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.