மக்களின் அடிப்படை தேவையை கூட செய்து தராத மாநகராட்சிக்கு நன்றி … மாநகராட்சிக்கு எதிராக திமுக கவுன்சிலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு …

மக்களின் அடிப்படை தேவையை கூட செய்து தராத மாநகராட்சிக்கு நன்றி … மாநகராட்சிக்கு எதிராக திமுக கவுன்சிலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு …

நெல்லை ;

நெல்லை மாநகராட்சியிலும் கடந்த சில மாதங்களாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேயரின் நடவடிக்கையை பிடிக்காத ஆணையர் ஆய்வுப் பணிகள் உட்பட பல்வேறு விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் மேயரின் ஆதரவு கவுன்சிலராக கருதப்படும் ஏழாவது வார்டை சேர்ந்த பெண் கவுன்சிலர் இந்திரா தனது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத நெல்லை மாநகராட்சிக்கு நன்றி என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

அதில் அவர் ஏழாவது வார்டு மக்களை வஞ்சிக்கும் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு நன்றி! சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நன்றி! தெருக்களில் பாலங்கள் போட்டு தரச் சொல்லியும் அதை போடாமல் இருக்கும் மாநகராட்சி ஆணையருக்கு நன்றி!

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதற்கு நன்றி! சொந்த ஊரில் அகதிகளாக எந்த வித அடிப்படை தேவையும் இல்லாமல் எங்களுடைய எந்த ஒரு கோரிக்கையும் எங்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி ஆணையாளருக்கும் மிக்க நன்றி!

ஏக்கத்துடன் எம்கேபி நகர் ஊர் பொதுமக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply