மகான் யோகானந்தரின் வழிகாட்டுதலால் காதல் தோல்வியிலிருந்து மீண்டது எப்படி?…
(ஓர் உண்மை சம்பவம்)

கோவை:
கருத்து ஒன்று படாத காதல் தோல்வியைத் தழுவுகின்றது. அப்புறம் என்ன? காதல் தோல்வி கவலையில் முடிகின்றது. ஈடேறாத காதல் பற்றி இடைவிடாது வருந்துவதால், காதலர்கள் உடல், மனம், மற்றும் உணர்வுகளின் நலம் குன்றி நலிவடைகின்றனர். எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணிக் காதலித்தோர் இதயம் புண்ணாகின்றது.
ஒரு தலைக் காதலால் துன்பமுற்று அதிலிருந்து, மகான் யோகானந்தரின் வழிகாட்டுதலால் மீண்ட ஓர் இளம் பெண்ணின் வாழ்வில் 82 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் உண்மை நிகழ்வு.
அவள் ஒரு இளம் பெண். அவள் என்னிடம் வந்து கூறினாள்.” எனது இதயம் சரிவர இயங்குவதில்லை.” இதய நிபுணரைப் பார்த்தேன். இருந்தும் எவ்விதப் பயனும் இல்லை. எனக்கு நீங்கள் உதவ முடியுமா?” நான் அவளுடைய மனதை ஊடுருவிப் பார்த்தேன் எனது உள்ளுணர்வு மூலம் அவரது பிரச்சனை என்ன என சரிவரப் புரிந்து கொண்டேன்.
நான் அந்த பெண்ணிடம் கூறினேன், “உனக்கு இதய நோய் ஏதுமில்லை. இன்றுடன் அந்த நோய் மறைந்துவிடும் என எனக்குத் தெரியும். நாளை ஒருவேளை அந்த நோய் இருந்தால் என்னை ஒரு ‘மாபெரும் பொய்யன்’ எனக் கூறிவிட்டு என்னைப் பற்றிய அனைத்தையும் மறந்து விடலாம்.”
“இது எப்படி நிகழும்?” என அவள் வினவினாள்.
நான் ஒரு வினாவுடன் அவளுக்கு விடையளித்தேன். சமீபத்தில் உன் வாழ்வில் ஒரு துயரம் மிகுந்த, வேதனை தரும் காதல் சம்பவம் நிகழ்ந்ததா?”
அவள் ஆச்சரியம் அடைந்தாள்.அவள் தலை குனிந்தாள். அது உண்மை என்று ஒப்புக் கொண்டாள்.”ஆமாம். நிகழ்ந்து. அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததை உறுதி செய்து கொண்ட பின்னர், நான் தொடர்ந்தேன். நீ அந்தத் துன்பமான அனுப வத்தைப் பற்றியே இரவும் பகலும் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கின்றாய். நீ உன் மனக்கவலையைக் களைந்து விட வேண்டும். சிந்திய பாலிற்காக இப்பொழுது ஏன் நீ அழ வேண்டும்? அன்பின் அருமையை மதிக்கும் ஒருவனைத் தேடு. உன்னை உண்மையாகவே நேசிக்காத ஒருவனிடம் விசுவாசமாக இருப்பதில் அர்த்தமில்லை. உன்னுடைய முன்னாள் காதலன் உன்னை மறந்து விட்டு, யாரோ ஒருத்தியிடம் மையல் கொண்டு, உல்லாசமாக இருக்கிறான். நீயோ இங்கு அவனுக்காக எவ்விதப் பயனும் இல்லாது ஏங்கிக் கொண்டு இருக்கிறாய்.”
அவனை மறந்து விட முயற்சிப்பதாக அவள் கூறினாள். “வெறும் முயற்சி பயன் தராது” நான் வலியுறுத்தினேன். “கட்டாயம் மறந்தாக வேண்டும். இந்த நிமிடமே அந்தக் கயவனை உன் மனதில் இருந்து விடுவித்து விடு.- அந்தப் பெண் ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள்.
சிறிது காலம் கழித்து அவள் என்னிடம் வந்து கூறினாள். “நீங்கள் கூறியது சரியே. நான் என்னை வஞ்சித்தவனை பற்றியும், காதல் தோல்வியால் நேர்ந்த கவலையையும் நீக்கிய அக்கணமே என் இதயத்துடிப்பு இயல்பான நிலைக்கு வந்துவிட்டது.”
மூலம் :
கவலை உணர்வைக் களைதல்
பரமஹம்ச யோகானந்தர்.
தொகுப்பு
முகுந்தன், 9345314918
யோகதா சத்சங்க தியான கேந்திரம்,
கோயமுத்தூர் -15