சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சாளர் பட்டியலில் இருந்து பிடிஆர் பெயர் நீக்கம்…

சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சாளர் பட்டியலில் இருந்து பிடிஆர் பெயர் நீக்கம்…

மதுரை;
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் பழனிவேல் தியாகராஜன்.  இவர் சமீபத்தில் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 30,000 கோடியை முதல்வரின் மருமகன் சபரீசனும் , மகன் உதயநிதியும் சம்பாதித்து விட்டனர்.   அதை  என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழிக்கின்றனர் என்று அவர் கூறியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

இந்த ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்த நிலையில் சிலர் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாகவும் , இது குறித்து ஏற்கனவே பிடிஆர் இரண்டு முறை விளக்கம் அளித்து விட்டார்.

எனவே இதைப் பற்றி பேசி அவர்களை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசுவோர் பட்டியலில்,  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் இடம்பெறவில்லை கடந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான முதல் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம் பெற்றது .ஆனால் தற்போது பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது .

Leave a Reply