சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை… கோவையில் அமைச்சர் நேரு அறிவிப்பு….

சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை… கோவையில் அமைச்சர் நேரு அறிவிப்பு….

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று துவங்கி வைத்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

‘’இனி இரு பக்கமும் கழிவு நீர் ஓடை கட்டி சாலைகள் போடப்படும். கோவையை சுத்தம் செய்ய நிறைய வாகனங்கள் வந்துள்ளது. கோவைக்கு உள்ள குடிநீர் பிரச்சனை நாடறிந்தது.

சிறுவாணி தண்ணீர் தேக்கம் குறைவாக உள்ளதால் தண்ணீர் தர முடியவில்லை, கேரளா அரசு தண்ணீர் தரவும் இல்லை.

பில்லூர் மூன்றாவது திட்டம் விரைவில் முடிந்து விடும். ஜீன் முதல் வாரத்தில் முதல்வர் இதனை துவங்கி வைப்பார். 170 எம்.எல்.டி. தண்ணீர் பில்லூர் திட்டத்தில் வழங்குகிறோம்.

கோவைக்கு பல்வேறு திட்ட பணிகள் 1010.19 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம்.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாக’’வும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply