2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மின் தடையில்லாத நிலை என பேச பேச மின் தடை… கடுப்பான தமிழக அமைச்சர் …

கடலூர்:
திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கலந்துகொண்டார்.
அப்போது அவருக்கு முன்னதாக பேசிய நிர்வாகி ஒருவர், அரசின் சாதனை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
அதிலும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, மின் தடையில்லாத நிலை என அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் பவர் கட் ஆனது.
இதனிடையே திமுக நிர்வாகிகள் மின் வாரிய அதிகாரிகளுக்கு மாறி மாறி போன் அடித்த நிலையில் சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது.
மின் தடை ஏற்பட்ட சில நிமிடங்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிக்காரர்கள் மொபைலில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து கூச்சலிடத் தொடங்கினர்.
இந்நிலையில் மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்டிருந்தாலும் அதை பொது வெளியில் காட்ட முடியாமல் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் இறுக்கமாக இருந்தார் குறிப்பிடத்தக்கது.