தீராதநோய்கள், கடன் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் கடவுள் ‘ரிண-ருண விமோச்சனர்’ !!

தீராதநோய்கள், கடன் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் கடவுள் ‘ரிண-ருண விமோச்சனர்’ !!

கடன்கள் மற்றும் நோய் தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் ‘ரிண-ருண விமோச்சனர்’ ஆவார். இவர் அருள் புரியும் கோயில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ளது.

மன்னார்குடியில் திருபாற்கடல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது சிவாலயங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்த இக்கோயிலில் மிகவும் போற்றப்படுபவர். தனிச்சந்நதியில் அருள்புரியும் ‘ரிண- ருண விமோச்சனர்’ ஆவார்.

இங்கு அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதருக்கு திங்கட்கிழமையில் அபிஷேகம் முடிந்ததும் தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும். காசி விசாலாட்சிக்கு வெள்ளிக்கிழமையிலும். வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமையிலும், ராகு காலத்தில் துர்க்கைக்கும், தேய்ப்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன ‘ரிண-ருண விமோச்சனர்’ தெற்கு திசை நோக்கி தனி சந்நதியில் பெரிய சிவலிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார்.

இக்கோயிலில் மேற்கு கோபுரவாசல் அருகேயுள்ள கமலாயத் திருக்குளத்தில் நீராடி, அங்கு அருள் புரியும் ‘படிக்காசு விநாயகரை வழிபட்ட பின் தியாகராஜப் பெருமானையும். அன்னை கமலாம்பிகையையும், நீலோத்யல அம்பாளையும், புற்றீஸ்வர(வான்மீக) பெருமானையும் வழிபட்டபின் ‘ரிண-ருண விமோச்சனப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும் பதினோருமுறை வலம் வந்து இந்த ஈஸ்வரரின் இடது புறத்தில் தனிச் சந்நதியில் சன்டேஸ்வரராக அமர்ந்திருக்கும் எமனையும் வழிபட்டால் நோய் நொடிகளிலிருந்தும், கடன் பிரச்சனைகள், வழக்குகள். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

அமாவாசை, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து மிளகு கலந்த உப்பினை இவரது திருவடியில் சமர்ப்பிப்துடன் வில்வபத்ரம், ரோஜா, நாகலிங்க புஷ்பம், வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் வழிபட்டாலும் தீராதநோய்கள். கடன்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.

Leave a Reply