டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இஷான் கிஷன் தேர்வு – பிசிசிஐ

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இஷான் கிஷன் தேர்வு – பிசிசிஐ

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

‘ஸ்கேன்’ பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார். அடுத்த மாதம் (ஜூன்) 7-ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்த நிலையில் அதிலிருந்தும் அவர் விலகினார்.

இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply