பலத்த எதிர்ப்புக்கிடையே அமைச்சர் சேகர்பாபு மகளை திருமணம் செய்த நபரை பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்த போலீஸ்…

பலத்த எதிர்ப்புக்கிடையே அமைச்சர் சேகர்பாபு மகளை திருமணம் செய்த நபரை பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்த போலீஸ்…

சென்னை:

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு… இவரது மகள் ஜெயகல்யாணி.. இவர் சதீஷ்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.. திருமணம் முடித்த கையோடு, பெங்களூரு சென்ற இந்த தம்பதியினர், அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்..

அத்துடன், தன்னுடைய தந்தையிடம் இருந்து பாதுகாப்புக்கோரினார் ஜெயகல்யாணி.. இது தொடர்பாக புகார் ஒன்றையும் தந்திருந்தார்.. அந்த புகாரில், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்ததாக தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெயகல்யாணி..

அதில்,

“நான் என்னுடைய முழு விருப்பத்துடன் வெளியே வந்து காதலனை கரம்பிடித்தபோது, எங்களை புனேவில் கண்டறிந்து எங்களை பிரித்து இருந்தனர். பிறகு, சதீஷின் தந்தை ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ததால் 2 மாதம் கழித்து கணவரை கண்ணில் காண்பித்தனர்.

என்னுடைய கணவரின் முன்னாள் காதலிக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில், எனது அப்பாவின் ஆதரவாளர்கள் அந்த பெண்ணை வைத்து எனது கணவருக்கு எதிராக புகார் தர வைக்கின்றனர். என்னுடைய கணவரை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம்.

நாங்கள் பதிவு திருமணமும் செய்துகொண்டுள்ளோம். எனது கணவரின் மீது பல்வேறு குற்றவழக்குகளை போலியாக பதிவு செய்துள்ளார்கள். நாங்கள் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றிபெற்றோம். நாங்கள் சென்னை வந்தால் உயிர்க்கு ஆபத்து.. அதனால், சென்னையில் கோர்ட்டுக்கு வரக்கூட பயமாக உள்ளது. என்னுடைய கணவரை கோர்ட்டில் சரணடைய வைத்தால் லாக்கப் டெத் செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது.

தமிழகத்தில் லாக்கப் டெத் அதிகரித்துவிட்டது. ஒருவேளை எங்களுக்கோ, என்னுடைய குழந்தைக்கோ, கணவருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு, என் அப்பா அமைச்சர் சேகர்பாபு, காவலர்கள் ஜானி செல்லப்பா, கிருஷ்ணமூர்த்தி, தாய்மாமா யுவராஜ் ஆகியோர்களே முழு பொறுப்பு ஆவார்கள்.. நாங்கள் கோர்ட்டில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

கடந்த 10 மாதத்தில் 3 போலி புகார்கள் என்னுடைய கணவரின் மீது பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அப்பா, முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் போலீசாரும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவாதம் அளித்தால், தாங்கள் தமிழ்நாட்டு வருவதாக அந்த வீடியோவில் அவர் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.. இந்த புகாரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் இந்த சதீஷ்குமார்.. 29 வயதாகிறது.. சதீஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் ஏற்கனவே உள்ளன..

இந்தநிலையில் பூந்தமல்லி செந்நீர்குப்பம் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமாரை இன்று புளியந்தோப்பு மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். சேகர்பாபுவின் மகளை திருமணம் செய்தவர், தற்போது கைதாகி உள்ள சம்பவம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply