அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு…

சென்னை;
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிட்டி பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ஜி.தேவராஜன் முதலமைச்சர் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.
எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார் என தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.