மீண்டும் நடிகர் ”அஜித்” சுற்றுலா !!

மீண்டும் நடிகர் ”அஜித்” சுற்றுலா !!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் பைக் மூலம் இந்தியாவைச் சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் முதல்கட்டமாக இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பனி படர்ந்த பல்வேறு பகுதிகளில் பைக்கில் நண்பர்களுடன் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் தொடக்க வேலையில் இருப்பதால் 2-ம் கட்ட பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜித் தற்போது மீண்டும் உலக சுற்றுலா செல்லவுள்ளார்.

அஜித் உலக சுற்றுலா செல்லவுள்ள பகுதி குறித்த மேப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply