திமுகாவுக்காக நாங்கள் இல்லை எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் திமுகவில் இருக்கோம்… திருவாரூர்   திமுக எம்எல்ஏ-வுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ..

திமுகாவுக்காக நாங்கள் இல்லை எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் திமுகவில் இருக்கோம்… திருவாரூர்        திமுக எம்எல்ஏ-வுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ..

சென்னை

 தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

 அமைச்சர் பதவிக்கு  மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆகியோரது பெயர்களே இதில் அதிகம் அடிபட்டன. இந்நிலையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் ஒட்டிய போஸ்டகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

அதில்,

“திருவாரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். கழகத்திற்காக நாங்கள் இல்லை எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் கழகத்தில் நாங்கள் இருக்கோம்.” என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த போஸ்டரை பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர்களே அதிகளவில் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply