தமிழகத்தின் சாபக்கேடு இவர் … ஆளுநர் ஆர்.என்.ரவி யை  விளாசிய வைகோ….

தமிழகத்தின் சாபக்கேடு இவர் … ஆளுநர் ஆர்.என்.ரவி யை  விளாசிய வைகோ….

திருச்சி;

திருச்சியில் ம.தி.மு.க பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

 “மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக புதிய ஊக்கம்  கொண்டு வளர்ந்து வருகிறது. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது வரை இல்லாத துர்பாக்கியம், தமிழகத்தின் சாபக்கேடு ஆளுனர் ஆர்.என் ரவி.

இல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கே வழி காட்டும் மாநிலமாக நம் தமிழகம் உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை எல்லோரும் பாராட்டும் நேரத்தில் ஆளுனர் உளரிக்கொண்டு உள்ளார்.

ஆளுனரின் எந்த வார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துத்துவ ஏஜெண்டாக அவர் செயல்பட விரும்பினால் அவர் பதவியை  ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து செயல்படுத்துகிறார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார் .

திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். நந்தினியை போல எல்லா மாணவ, மாணவிகளும் உருவாக வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

ஆளுனர் ஆளுனராக நடந்து கொள்ளவில்லை  அவர் ஒரு கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தான்தோன்றிப் போக்கு சரியல்ல . ஆளுநர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல” என்று தெரிவித்தார். 

Leave a Reply