போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த வாலிபர் கோவையில் கைது …மேலும் இருவரை தேடும் போலீஸ் …

போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த வாலிபர் கோவையில் கைது …மேலும் இருவரை தேடும் போலீஸ் …

கோவை ;

கோவை சாய்பாபா காலனி அருகே தடாகம் சாலையில் போதைப் பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

போதை பொருள் விற்கும் நபரை பிடிப்பதற்காக சாய்பாபா காலனி போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது அங்கு போதை பொருள் மாத்திரை விற்று வந்த ஹரிஹரன் என்ற 19 வயதுடைய இள வயது வாலிபரை கைது செய்தனர்

அப்போது போதை பழக்கத்திற்காக பயன்படுத்தப்படும் 80 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

வாலிபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மாத்திரைகள் விற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தக்ஷிணாமூர்த்தி, அக்ஷய் என்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply