முதல் நீ முடிவும் நீ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !!

முதல் நீ முடிவும் நீ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘கிடாரி’, ‘நிமிர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும் நடிகருமான தர்புகா சிவா இயக்கி இசையமைத்த படம் முதலும் நீ முடிவும் நீ. இதில் கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இளைஞர்களின் உணர்வுகளையும், இன்றைய சிறுவர்களின் மன நிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற முதல் நீ முடிவும் நீ பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் முதல் நீ முடிவும் நீ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாமரை எழுத்தில் சித் ஸ்ரீராம், தர்புகா சிவா குரலில் வெளியான இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply