ஆந்திர ராமர் கோவிலுக்கு பிரபாஸ் ரூ.10 லட்சம் நன்கொடை!!

ஆந்திர ராமர் கோவிலுக்கு பிரபாஸ் ரூ.10 லட்சம் நன்கொடை!!

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ .

இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

நேற்று தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் ரமாதேவியை சந்தித்து கோவில் அன்னதானத்திற்காகவும், கோசாலை விரிவாக்கத்திற்காகவும் ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த செயல் பிரபாஸின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply