கோவையில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்!!

கோவையில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்!!

கோவை,

கோவை மாவட்டம், சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியினை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகள், ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி விடுதிகளின் 2022 -23 ஆம்

கல்வி ஆண்டு 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 6 மாணவ மாணவியர்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

முன்னதாக, வஉசி மைதானத்தில் உள்ள கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலைக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், மேற்கு மண்டல காவல் துறை துணைத்தலைவர் விஜயகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை கமிஷன ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மண்டலக் குழுத் தலைவர்கள் இலக்குமி இளங்செல்வி கார்த்திக், எஸ்.மீனாலோகு, தெய்வயானை தமிழ்மறை, வே.கதிர்வேல், தனலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சுரேஷ், மாமன்ற உறுப்பினர் ஆர்.வித்யா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply