கரண்ட் பில் எல்லாம் கட்ட மாட்டோம்.. இலவசம்னு காங்கிரஸ் வாக்குறுதி குடுத்திருக்காங்க…. மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்வாரிய ஊழியரை தெறிக்க விட்ட கிராமத்தினர்…

கரண்ட் பில் எல்லாம் கட்ட மாட்டோம்.. இலவசம்னு காங்கிரஸ் வாக்குறுதி குடுத்திருக்காங்க…. மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்வாரிய ஊழியரை தெறிக்க விட்ட கிராமத்தினர்…

கர்நாடகா;

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் முதல் நாள் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ‘உத்தரவாதங்களுக்கு’ ஒப்புதல் முத்திரை அளிப்பதாக காங்கிரஸ் பலமுறை கூறியது.

அது என்னவென்றால் 200 யூனிட்கள் இலவச மின்சாரம் தருகிறோம் என்ற அறிவிப்பும் இதில் அடங்கும்.

200 யூனிட்கள் இலவசமாக தருவதாக தேர்தலுக்கு முந்தைய காங்கிரஸின் வாக்குறுதியை காரணம் காட்டி திங்கள்கிழமை கர்நாடகாவில் உள்ள கிராமவாசிகள் சிலர் மின்கட்டணத்தை செலுத்த மறுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்,

மக்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்கள். பில் கலெக்டர் அவர்களிடம், “நீங்கள் இந்த மாதம் பில் கட்ட வேண்டும்.” என்று கூற,

“நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம். அவர்கள் (காங்கிரஸ்) மின்சாரம் இலவசம், என்று சொன்னார்கள்” என்று பதில் அளித்தார்.

இலவச மின்சாரம் தருவதாக அரசு சொன்னால், மின் துறையும் அதை பின்பற்றும் என்று அவர்களிடம் கூறினார் அந்த அரசு ஊழியர்.

மற்றொரு கிராமவாசி,

“நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) வசூலிக்கிறீர்கள், எங்களிடம் அல்ல. நாங்கள் கட்டணம் செலுத்த மாட்டோம்,” என்று கிராமவாசி கூறி, அங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply