மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் 71 லட்சத்திலான பணிகளை கோவை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்!!

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் 71 லட்சத்திலான பணிகளை கோவை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்!!

கோவை,
மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் 71 லட்சத்திலான பணிகளை கோவை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.23க்குட்பட்ட சௌபாக்கியா நகர் பகுதியில் 190 மீட்டர் தொலைவிற்கு ரூ.19.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ஆர்சிசி குழாய் பதித்தல் பணி, வார்டு எண்.8க்குட்பட்ட முருகன் நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 365 மீட்டர் தொலைவிற்கு ரூ.17.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணி மற்றும் இரா.மோகன் நகர் பகுதியில் ரூ.34.2 லட்சம் மதிப்பீட்டில் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சேதமடைந்த தார் சாலையை செப்பனிடும் பணி ஆக மொத்தம் ரூ.71.3 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.23க்குட்பட்ட சௌபாக்கியாநகர் பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் தேங்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முருகன் நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் மேயர் கல்பனா, சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் மணியன், பொன்னுசாமி, விஜயகுமார், உதவிஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் இளங்கோவன், உதவிபொறியாளர் குமார், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply