ஏழைகள் உடல் வலிக்குதான் மது அருந்துகின்றனர்… மது கம்மி விலையில் விற்றால் அவர்கள் ஏன் கள்ள சாராயம் குடிக்க போகிறார்கள் … அறிவுபூர்வமாக பேசிய கேபி முனுசாமி…  

ஏழைகள் உடல் வலிக்குதான் மது அருந்துகின்றனர்… மது கம்மி விலையில் விற்றால் அவர்கள் ஏன் கள்ள சாராயம் குடிக்க போகிறார்கள் … அறிவுபூர்வமாக பேசிய கேபி முனுசாமி…  

சூளகிரி;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் துணை பொதுசெயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்கினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி,

“திமுக ஆட்சி, செயலிழந்த ஆட்சியாக இருந்து வருகிறது. சமூக விரோத சக்திகள் சட்டத்தை கையில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உள்ளது.

ஏழை,எளியோர் உடல் வலிக்கு மது அருந்த சென்றால் கூடுதல் விற்பனைக்கு விற்கிறார்கள். ,குறைந்த விலையில் மது விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்பதால் அவர்கள் கள்ளச்சாரயத்தை தேடி செல்கிறார்கள். அதற்கு துணையாக ஆட்சியாளர்களே இருக்கின்றனர்.. போலீஸ் செயலிழந்து இருப்பதற்கு முழு பொறுப்பு தமிழக முதல்வர் தான்.

யானை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு 5 லட்சம் நிவாரணம், கட்டிடத்தொழிலாளி பணியின் போது தவறி விழுந்தால் 3 லட்சம் நிவாரணம்.

ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி ஊக்குவிக்கிறார்கள் என்றால் ஸ்டாலின் தலைசிறந்த முதல்வர் என்பதை காட்டுகிறது, இதைவிட வேறு விமர்சிக்க முடியவில்லை.

Leave a Reply