கோவை கவுண்டம் பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…

கோவை கவுண்டம் பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…

கோவை,

கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நேர்முக உதவியாளர் மேரி வினிதா, தாசில்தார்கள் சந்திரன் (மேட்டுப்பாளையம்), காந்திமதி (அன்னூர்), கணேஷ் பிரபு மண்டல துணை தாசில்தார் (கோவை வடக்கு) மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மதுபாலா, ராஜன், மோனிஷா, விஜய கோபால், மாவட்ட சார் பதிவாளர் அலுவலக சார் பதிவாளர் ஸ்ரீராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, அனிதா, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் நந்தினி, சசி, இந்திரா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நீண்ட நாள் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து தீர்வு காண கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் நேரில் ஆய்வு செய்தும், விரைவில் உங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும், விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.

மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர் உட்பட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Leave a Reply