பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா – ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்?

பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா – ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்?

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நடித்துள்ள மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply