லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்!!

லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதன்படி, இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார்.

இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், “முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Reply