2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்குவதாக  ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்குவதாக  ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….

டெல்லி:

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

கருப்பு பணம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதை தடுக்கும் விதமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது புதிதாக ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதன் முதல் மக்கள் மத்தியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply