சிறுமியின் கண்களில் இருந்து கொட்டும் அரிசி ,பிளாஸ்டிக் துண்டுகள் , இரும்பு துகள்கள் … மருத்துவர்கள் வியப்பு…

சிறுமியின் கண்களில் இருந்து கொட்டும் அரிசி ,பிளாஸ்டிக் துண்டுகள் , இரும்பு துகள்கள் … மருத்துவர்கள் வியப்பு…

மகபூபாபாத் ;

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுமி கண்ணிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள், இரும்பு துகள்கள் ஆகியவை வெளிவருகின்றன.

அரசு பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவி சுஜன்யா வின் பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுஜன்யாவின் ஒரு கண்ணிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பிளாஸ்டிக் துண்டுகள், பேப்பர், இரும்பு துகள்கள் ஆகியவை தொடர்ந்து வெளிவருகின்றன.

தினமும் இதுபோல் நடைபெறுவதால் பெற்றோர் சிகிச்சைக்காக மகளை கம்மம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் சுஜன்யாவின் கண்ணில் இருந்து பல்வேறு பொருட்கள் எப்படி வெளியாகின்றன என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply