அதிகாலையிலேயே திறக்கப்பட்ட டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்கிக் குடித்த இருவர் பலி.. தாசில்தாரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்..

அதிகாலையிலேயே திறக்கப்பட்ட டாஸ்மாக் பாரில்  மதுபானம் வாங்கிக் குடித்த இருவர் பலி.. தாசில்தாரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்..

தஞ்சாவூர்;  

 தஞ்சாவூர் அருகே கீழவாசல்(கீழ் அலங்கம்) பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைக்கு அருகே பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் 24 மணி நேரமும் மது விற்க்கப்பதடுவதாக கூறப்படுகிறது.

இந்த பாரில் காலை 11 மணி அளவில் குப்புசாமி என்ற 60 வயது முதியவர் மது வாங்கி குடித்துள்ளார். குடித்துவிட்டு வெளியே வரும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே சுருண்டு விழுந்து உள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயர்ந்தார். இதேபோல் அடுத்த பத்து நிமிடத்தில் அதே கடையில் அதே வகை மதுவை வாங்கி குடித்த விவேக் என்ற 36 வயது இளைஞனும் சாலையில் சுருண்டு விழுந்து உள்ளார்.

உடனடியாக அவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தசம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் தாசில்தார் தங்க.பிரபாகரன் மற்றும் கடையின் சூப்பர்வைசர் முருகன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி கடைக்குள் பூட்டிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தற்போது விசாரணை செய்து வருகிறார்.

மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் அங்கு குவிந்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply