டாஸ்மாக்-ல் அளவாக மது குடித்தால் உடலுக்கு தீங்கு நடக்காது…அறிவுரையை அள்ளி தந்த சேலம் கலெக்டர் பேசிய வீடியோ…

டாஸ்மாக்-ல் அளவாக மது குடித்தால் உடலுக்கு தீங்கு நடக்காது…அறிவுரையை அள்ளி தந்த சேலம் கலெக்டர் பேசிய வீடியோ…

சேலம் ;

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த வாரம் கள்ளச் சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கியது.

இந்நிலையில் சேலம்  மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மதுபானம் தொடர்பாக பேசியது சர்ச்சையாகி உள்ளது .

அவர் பேசியதாவது,  

” கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும். டாஸ்மாக்கில் முறைபடுத்தப்பட்ட நேரத்தில் விற்பனை நடக்கிறது என்றால், அங்கே கிடைக்கும் மது ஒரு வகையான செயல்முறைக்கு உற்படுத்தப்பட்ட மது.

இதனால் டாஸ்மாக்கில் கிடைக்கும் மதுவை அளவாக குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது. இதுபோல விழிப்புணர்வு இல்லாமல் தவறான வழியில் சென்று, தனக்கும் தனது குடும்பத்திற்கும், அரசுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளத்தில், மாவட்ட ஆட்சியரின் கருத்தை பதிவு செய்து, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Leave a Reply