திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சவாமி கோவிலில், இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

அங்குள்ள ரங்கநாதர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சமீபத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான விடுதலை திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இளையராஜாவின் இசையில் கஸ்டடி, மியூசிக் ஸ்கூல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply