ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்!!

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தமிழில் கோபுர வாசலிலே, இருவர், பாப் கான், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன்லால் பிறந்தநாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply