ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர்…. 50 க்கும் மேற்பட்டோர் கைது ..

ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர்…. 50 க்கும் மேற்பட்டோர் கைது ..

எடப்பாடி;

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், கிருஷ்ணன் பிரபாகரன்,மனோஜ் பாண்டியன்,மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி நகர செயலாளர் முருகன், தலைமையிலான அதிமுகவினர் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்குள் புகுந்து ரகளை செய்ய முற்பட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார். அதன் பிறகு ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருந்த போதிலும் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்த நிலையிலும், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையிலான 50க்கும் மேற்பட்டவர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு வெளியேறிய பெங்களூரு புகழேந்தியை  தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்டனர்.

அப்போது கார் கண்ணாடி உயர்த்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெங்களூர் புகழேந்தி அடி வாங்காமல் தப்பி சென்ற நிகழ்வு வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Leave a Reply