நான் எப்போதுமே எம்.எஸ். டோனி யின் ரசிகர்தான் – ஹர்திக் பாண்ட்யா!!

நான் எப்போதுமே எம்.எஸ். டோனி யின் ரசிகர்தான் – ஹர்திக் பாண்ட்யா!!

ஐபிஎல் குவாலிபையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். இவரை எம்.எஸ். டோனி போன்று கூல் கேப்டன் என்று அழைக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல்தான் ஆடுகளத்தில் ஹர்திக் செயல்படுகிறார்.

ஹர்திக் பாண்ட்யா எம்.எஸ். டோனியின் தீவிர ரசிகர். டோனியிடம் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டுள்ளார்.

இன்று தான் கற்றுக் கொண்ட குருவிற்கு எதிராக களம் இறங்குகிறார்.

இந்த நிலையில் எம்.எஸ். டோனி குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

நான் எப்போதுமே எம்.எஸ். டோனியின் ரசிகர்கன்தான். ஏராளமான ரசிகர்கள், கிரிக்கெட் விரும்பிகள் அவருக்காக மைதானம் வருகிறார்கள். நீங்கள் டோனியை வெறுக்க வேண்டும் என்றால், ஒரு பிராப்பர் டெவில் (பேய்) ஆக வேண்டும்.

ஏராளமான மக்கள் அவர் ஒரு சீரியஸ் நபர் என நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் நகைச்சுவையாக பேசுவேன். நான் டோனியை டோனியாக பார்க்கவில்லை.

உண்மையிலேயே அவரிடம் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டுள்ளேன். அவரிடம் பேசியதைவிட, பார்த்துதான் அதிகம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு அவர் நண்பர் மாதிரி. மாண்புமிகு சகோதரர். நான் நகைச்சுவை செய்பவன்.

என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply