புஷ்பப் பல்லக்கில் பஞ்சமூர்த்தி சுவாமிகள்..!! – சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக சிறப்பு…

புஷ்பப் பல்லக்கில் பஞ்சமூர்த்தி சுவாமிகள்..!! – சட்டை நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக சிறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கும் சட்டை நாதர் சுவாமி கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

அதனை தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதையடுத்து, பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர்.

தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

பின்னா் தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply