திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை பற்றி பொது கூட்டத்தில் பேசும் போது “கரண்ட் கட்”.. கடுப்பில் கிளம்பி சென்ற திமுக எம்எல்ஏ…

திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை பற்றி பொது கூட்டத்தில் பேசும் போது “கரண்ட் கட்”.. கடுப்பில் கிளம்பி சென்ற திமுக எம்எல்ஏ…

காஞ்சிபுரம்:

 திமுக ஆட்சியில் அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது .”மின் வெட்டினால் திமுக ஆட்சியே பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது . அந்த அளவுக்கு தமிழகமெங்கும் தற்போதும் கரண்ட் கட் ஆகி வருகிறது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு நடந்தது..

பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடந்தது.. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பிறகு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருந்தார் . திமுகவின் மூத்த நிர்வாகிகளும், தலைவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர்..

அப்போது திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டது.. அந்த பகுதி முழுவதுமே மின்தடை ஏற்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், கடுப்பாகி மேடைக்கு அருகே நின்று கொண்டு, நிர்வாகிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்தார் எம்எல்ஏ .

நீண்ட நேரமாக காத்திருந்தும் கரண்ட் வரவில்லை. இந்த விழாவை முடித்துவிட்டு, இன்னொரு கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்ததையும் எம்எல்ஏ சொல்லி கொண்டே இருந்தார். பிறகு, பயனாளி ஒருவருக்கு மட்டும் நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

அரசு நிகழ்ச்சியில் இப்படி கரண்ட் போவது முதல்முறை கிடையாது. அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் இதுபோல கரண்ட் கட் ஆகி வருவது தொடர்கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply