கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மவுனமாக இருப்பது ஏன் ? திமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்துபோகிறார்களா … ஜிகே வாசன் கேள்வி …

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மவுனமாக இருப்பது ஏன் ? திமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்துபோகிறார்களா … ஜிகே வாசன் கேள்வி …

திருவாரூர் ;

 கள்ளச்சாராய உயிரழப்பு சம்பவங்களுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மவுனம் சாதித்து திமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்துபோவதாக த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார்.

திருவாரூரில்  செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன் கூறியதாவது :-

திமுக அரசியல் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி டாஸ்மார்க் கடையை மூடுவோம் என்பதுதான். முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் மக்கள் ஏமாந்த நிலையில் இருக்கிறார்கள்.

 எதிர்மறை வாக்குகள் அதிகரிக்கும். தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்கின்ற கள்ள சாராய உயிரிழப்புகள் மற்றும் தஞ்சையில் மதுபானம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிப்பது திமுகவின் செயலுக்கு ஒத்துப்போவது என்று அர்த்தம்.

மதுவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தி வருகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் பொருளாதார ரீதியாக தமிழகத்திற்கு பயன்தரவேண்டும்.

வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதை உறுதி சொல்லும் பயணமாக இருக்க வேண்டும். மழையினால் பருத்தி பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்

Leave a Reply