டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க சென்ற  திருடர்களை பிடிக்க சென்ற போலீசை அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்…

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க சென்ற  திருடர்களை பிடிக்க சென்ற போலீசை அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்…

நீலகிரி;

நீலகிரி மாவட்டம் குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையன் மணி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

 கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் காயமடைந்த கொள்ளையன் மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

தப்பிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிகாலையில் மதுபான திருட்டில்  ஈடுபட்ட இரண்டு பேரை பிடிக்க முயன்ற போது கத்தியால் காவலர்களின் தாக்கியதால் இருவரில் ஒருவரை தொடைக்கு  கீழ் சுட்டு பிடித்துள்ளனர் போலீசார் .

தமிழ்நாடு – கேரளா பகுதிகளில் மதுபானங்களை திருடுவதை கொள்ளையன் சாம்பார் மணி வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது அவர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply