செந்தில்பாலாஜி ஆதரவாளர்களால் தொடரும் அராஜகம்…  9 இடங்களில் நிறுத்தப்பட்ட ரெய்டு… பாதுகாப்பு கோரி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஐடி அதிகாரிகள்.. பரபரப்பு…

செந்தில்பாலாஜி ஆதரவாளர்களால் தொடரும் அராஜகம்…  9 இடங்களில் நிறுத்தப்பட்ட ரெய்டு… பாதுகாப்பு கோரி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த ஐடி அதிகாரிகள்.. பரபரப்பு…

கரூர் :

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.. இந்தநிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் இருக்கும் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அதிகாலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை திமுகவினர் உடைத்தனர்

அங்கு அதிகாரிகளை வீட்டுக்குள் உள்ளே விடாத வகையில் திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். அந்த இடத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் உள்ளே சென்ற அதிகாரிகள் காரில் இருக்கும் லேப்டாப், மற்றும் அவர்களது கையில் இருந்த கோப்புகளை இழுத்து கீழே போட்டதாக தகவல்கள் வெளியாகின.

துணை மேயர் தாரணி சரவணன், காளியாபுரத்தில் பெரியசாமி, ராமகிருஷ்ணாபுரம் அசோக் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனையானது உடனே நிறுத்தப்பட்டது. திமுகவினர் கார் கண்ணாடிகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாலும் அதிகாரிகளை அச்சுறுத்தி வருவதாலும் அதிகாரிகள் கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

காவல் துறை பாதுகாப்புடன் ஐடி ரெய்டு நடத்த முடிவு செய்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். எனவே போலீஸார் பாதுகாப்புடன் விடுபட்ட இடங்களில் சோதனை நடத்தப்படும்.

மற்றபடி கரூரில் மற்ற இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply