தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…

தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நிறைவு பெற்றது.

இதையடுத்து கடந்த 29ம் தேதி முதல் முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில்  1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் வானிலை மிக மோசமாக சுட்டெரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வானிலை சரியாக ஜூன் 7ம் தேதி வரை ஆகும். அதுவரை வெயில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து உள்ளது.

மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில்தான் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Leave a Reply