4 வயது மகனை அருகில் வைத்து கொண்டு பாரில் மது அருந்திய பாசக்கார தந்தை ….. அதிர்ச்சி சம்பவம்…

4 வயது மகனை அருகில் வைத்து கொண்டு பாரில் மது அருந்திய பாசக்கார தந்தை ….. அதிர்ச்சி சம்பவம்…

திருவண்ணாமலை ;

தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் குடித்து இருவர் இறந்த நிலையில் மதுக் கூடங்களில் அனுமதி இன்றி பார் நடத்துவது மற்றும் மது பாரின் அனுமதி நேரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 21 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மது விற்க வேண்டும். 21 வயதுக்கும் மேற்பட்டவர்களை மட்டுமே மதுபான கூடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிரபல நளா என்ற மதுபானக் கூடத்தில் இன்று பிற்பகல் 4 வயது மகனுடன் அவரது தந்தை தனது நண்பர்களுடன் அமர்ந்து மது குடிக்கின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் சூழலில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மீறி 4 வயது சிறுவன் மதுபான கூடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply